
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது.
நேற்று காலை 8:00 மணிக்கு ஆண்டாள், ரெங்க மன்னார் யாகசாலைக்கு எழுந்தருளினர். அங்கு எஜமான சங்கல்பம், புண்யாக வாசனம், மஹாசாந்தி ஹோமம், திருமஞ்சனம், பூர்ணஹூதி, திருவாராதனம் சாத்துமுறை, தீர்த்தகோஷ்டி மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று 108 கலச திருமஞ்சனமும், நாளை (பிப். 8) விசேஷ திருமஞ்சனம் மற்றும் லட்சார்ச்சனை நடக்கிறது.

