நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்; சாத்துார் அருகே பழைய ஏழாயிரம் பண்ணை பழனி ஆண் டவர் கோயிலில் தைப்பூசம் வருடாபிஷேகம் ,திருக்கல்யாணம் நடந்தது.
ஜன.24 காலை 9:00 மணிக்கு வருடாபிஷேகம் நடந்தது. தொடர்ந்துகொடி மரம் பிரதிஷ்டை, ராஜகோபுரவிநாயகர், பலிபீடம், மயில்வாகனம் பிரதிஷ்டை நடந்தது.
நேற்று காலை 9:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் அன்னதானம் ,விளக்கு பூஜை ,காவடி ஊர்வலம் நடந்தது. ஏழாயிரம்பண்ணை கோவில்பட்டி சிவகாசி சாத்துார் வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

