/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரயில்வே ஸ்டேஷனில் தொழிலாளிக்கு வெட்டு இருவர் கைது
/
ரயில்வே ஸ்டேஷனில் தொழிலாளிக்கு வெட்டு இருவர் கைது
ADDED : டிச 11, 2024 02:42 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில்வே ஸ்டேஷனில் சென்னை செல்ல காத்திருந்த செங்கல் சூளைத் தொழிலாளி செல்வராஜ் தகராறில் வெட்டப்பட்ட சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லுார் கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ் 24; செங்கல் சூளை தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு தனது நண்பர் ராமச்சந்திரன் என்பவருடன் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை செல்ல சங்கரன்கோவில் ரயில்வே ஸ்டேஷன் நடைமேடையில் காத்திருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத இரண்டு பேர் செல்வராஜை அரிவாளால் வெட்டியதில் அவர் பலத்த காயமடைந்தார்.
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் செல்வராஜ் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக வாசுதேவநல்லுாரைச் சேர்ந்த கண்ணன் 19, சூர்யா 19, ஆகிய இருவரை ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
செல்வராஜிற்கும், கண்ணனுக்கும் கோயில் திருவிழா முன்விரோதம், பெண்ணை காதலிப்பதில் தகராறு இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

