/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இரிடியம் முதலீட்டில் 1.38 கோடி மோசடி அ.தி.மு.க.,வினர் இருவர் உட்பட மூவர் கைது
/
இரிடியம் முதலீட்டில் 1.38 கோடி மோசடி அ.தி.மு.க.,வினர் இருவர் உட்பட மூவர் கைது
இரிடியம் முதலீட்டில் 1.38 கோடி மோசடி அ.தி.மு.க.,வினர் இருவர் உட்பட மூவர் கைது
இரிடியம் முதலீட்டில் 1.38 கோடி மோசடி அ.தி.மு.க.,வினர் இருவர் உட்பட மூவர் கைது
ADDED : அக் 25, 2025 01:06 AM

விருதுநகர்: விருதுநகரில் இரிடியம், காப்பர் விற்பனை தொடர்பான அறக்கட்டளையில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மூன்று மாதத்தில் ரூ.1 கோடி கிடைக்கும் என்று கூறி வெம்பக்கோட்டையை சேர்ந்தவரிடம் ரூ.1.38 கோடி ரூபாய் மோசடி செய்த அ.தி.மு.க.,வை சேர்ந்த பட்டுராஜன் 52, கந்தலீலா 55, உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் தொடர்புடைய மேலும் 7 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் தேடி வருகின்றனர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்துார் அ.தி.மு.க., மேற்கு எம்.ஜி.ஆர்., மன்ற ஒன்றிய துணைச் செயலாளர் பட்டுராஜன், அ.தி.மு.க., உறுப்பினர் கந்தலீலா, ராணி நாச்சியார் 53, மற்றும் சிலர் ' அப்துல் கலாம் ட்ரீம் பிராஜெக்ட் அண்டு இரிடியம் காப்பர் சேல்ஸ்'என்ற பெயரில் அறக்கட்டளை துவங்கினர்.
ரிசர்வ் வங்கியில் பதிவு செய்தது போன்று போலியாக காட்டி இரிடியம் காப்பர் விற்பனையில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 3 மாதத்தில் ரூ.1 கோடி லாபம் கிடைக்கும் எனக்கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்தனர்.
இவர்களிடம் பணத்தை இழந்த வெம்பக்கோட்டை முத்துநகரைசேர்ந்த பழனிச்செல்வம் 46, விருதுநகர் சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் பட்டு ராஜன், கந்தலீலா, ராணி நாச்சியார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பழனிச்செல்வம் புகாரில் தான் ரூ.1 கோடியே 38 லட்சம் பணம் முதலீடு செய்து ஏமாந்ததாக தெரிவித்துள்ளார். 2018 முதல் 2025 ஜன. வரை நடந்த இந்த மோசடியில் இன்னும் பலர் முதலீடு செய்திருக்கலாம் என்றும், ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் மாதம் ரூ.30 ஆயிரத்தில் இருந்து முதலீடு செய்துள்ளனர் என்றும் போலீசார் கூறினர்.
கைது செய்யப்பட்டுள்ள பட்டுராஜன் சேத்துார் கூட்டுறவு சங்க தலைவராக இருந்தவர். தற்போதும் அ.தி.மு.க.,வில் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார்.

