/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திறப்பு விழா கண்டும் பூட்டப்பட்ட பூங்கா
/
திறப்பு விழா கண்டும் பூட்டப்பட்ட பூங்கா
ADDED : மார் 11, 2024 04:57 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை காந்தி நகர் பகுதியில் உள்ள சாய்பாபா கோயில் அருகில் புதியதாக கட்டப்பட்ட நகராட்சி சிறுவர் பூங்கா திறப்பு விழா கண்டும், பூட்டியே கிடப்பதால் சிறுவர்கள் சுவர் ஏறி குதித்து விளையாடுகின்றனர்.
அருப்புக்கோட்டை மக்களின் பொழுதுபோக்கிற்காக நகரின் பல பகுதிகளில் நகராட்சி மூலம் 6க்கும் மேற்பட்ட பூங்காக்கள் திறக்கப்பட்டன. ஒரு சிலவற்றைத் தவிர மற்ற அனைத்தும் பயன்பாடு இன்றியே பாழாகி விட்டன. இந்நிலையில் மார்ச் 3ல் நேதாஜி ரோட்டில் ரூ.50 லட்சத்தில் ஒரு பூங்காவும், சாய்பாபா கோயில் அருகில் ரூ.34 லட்சத்தில் ஒரு பூங்காவையும் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
இதில் சாய்பாபா கோயில் அருகில் உள்ள பூங்கா பூட்டியே கிடக்கிறது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள ஜோதிபுரம், ஜவகர் சங்கம் உட்பட பகுதியில் உள்ள குழந்தைகள் பூங்காவில் விளையாட வந்து அவை பூட்டி கிடந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். சில குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் வந்து பூங்காவின் கேட், சுவர் வழியாக இறங்கி உள்ளே சென்று விளையாடி மகிழ்கின்றனர். குழந்தைகளின் நலன் கருதி இந்த பூங்காவை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி என நடவடிக்கை எடுக்க வேண்டும்.

