/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கழிவு நீரில் நின்று குழாயில் கசியும் நீரை சேகரிக்கும் அவலம்
/
கழிவு நீரில் நின்று குழாயில் கசியும் நீரை சேகரிக்கும் அவலம்
கழிவு நீரில் நின்று குழாயில் கசியும் நீரை சேகரிக்கும் அவலம்
கழிவு நீரில் நின்று குழாயில் கசியும் நீரை சேகரிக்கும் அவலம்
ADDED : நவ 11, 2025 03:22 AM

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கலில் குடிநீர் பற்றாக்குறையால் செங்குளம் கண்மாய் கழிவு நீரில் நின்று குழாயில் கசியும் நீரை மக்கள் குடிப்பதற்காக சேகரிக்கின்றனர். எனவே சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
திருத்தங்கல் செங்குளம் கண்மாய் வழியாக கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் செல்கிறது. இதில் அமைக்கப்பட்டுள்ள வால்வு மூலமாக குடிநீர் கசிந்து வெளியேறுகிறது. திருத்தங்கல் பாண்டியன் நகர், வள்ளலார் நகர், கருப்பசாமி நகர், மேல ரத வீதி, 32 வீட்டு காலனி உள்ளிட்ட பகுதிகளில் பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இது அனைவருக்கும் போதவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் வேறு வழியே இன்றி செங்குளம் கண்மாய் கழிவு நீரில் நின்று இதன் வழியாகச் செல்லும் குழாயிலிருந்து கசியும் நீரை குடிப்பதற்காக சேகரிக்கின்றனர். எனவே இப்பகுதிக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.