/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிக் தொழிலாளர்களுக்கு டூவீலர் வாங்க மானியம்
/
கிக் தொழிலாளர்களுக்கு டூவீலர் வாங்க மானியம்
ADDED : ஜூலை 26, 2025 03:24 AM
விருதுநகர்: தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் காளிதாஸ் செய்திக்குறிப்பு: தமிழகத்தில் ஆன்லைன் சார்ந்த பணிகள் செய்யும் கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களை அதிகளவில் பதிவு செய்ய மாவட்ட அளவில் சிறப்பு முகாம் இன்று(ஜூலை 26) நடக்கிறது. விருதுநகர் மதுரை மெயின் ரோட்டில் கே.எப்.சி., ஒட்டல், ராஜபாளையம் பாம்பே ஜவுளிக்கடை எதிர்புறம் உள்ள ஆனந்தா விலாஸ் அசைவ ஓட்டல், சிவகாசி என்.ஆர்.கே.ஆர்., ரோட்டில் உள்ள விஜயம் மெஸ் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.
பதிவு பெற்றவர்களுக்கு ஆன்லைன் சார்ந்த தொழிலாளர்கள் நலவாரியத்தின் மூலம் எலெக்ட்ரிக் டூவீலர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது, என்றார்.

