ADDED : மார் 19, 2024 05:37 AM
ராஜபாளையம் : ராஜபாளையம் ராம்கோ குரூப் பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் டிரஸ்ட் சார்பில் ஜெயந்த் மலைவாழ் பழங்குடியினர் விடுதி ஆண்டு விழா நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக இயக்குனர் தேவராஜ் பங்கேற்று ராம்நகர், அத்தி கோவில், வள்ளியம்மாள் நகர் செண்பகத் தோப்பு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மலைவாழ் குடும்பங்களுக்கு ஆடைகள் வழங்கினார்.
சிறந்த மாணவர்களுக்கு நிர்மலா விருது வழங்கினார். பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் டிரஸ்டி சாரதா தீபா தலைமை வகித்தார். கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
விடுதி மேலாளர் முருகேசன் ஆண்டறிக்கை வாசித்தார். சிவகாசி ஆர்.டி.ஓ., விஸ்வநாதன், பி.ஏ.சி.ஆர்., கல்வி நிறுவன தாளாளர் ஸ்ரீகண்டன் ராஜா, சுதர்சனம் மில் இயக்குனர் ராம்குமார் ராஜா, ராம்கோ டிரஸ்டிகள் செயலாளர் குருசாமி, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். விடுதி காப்பாளர் ராமசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

