/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., கோர்ட்டில் கேரள மாவோயிஸ்ட் ஆஜர்
/
ஸ்ரீவி., கோர்ட்டில் கேரள மாவோயிஸ்ட் ஆஜர்
ADDED : பிப் 07, 2024 01:43 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்:போலி முகவரி சான்று கொடுத்து சிம் கார்டு வாங்கிய வழக்கில் கைதான கேரள மாவோயிஸ்ட் அனுப் மேத்யூ ஜார்ஜ், வழக்கின் விசாரணைக்காக நேற்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
2016ல் சிவகாசியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் அடையாள அட்டை ஜெராக்ஸை, போலி முகவரி சான்றாக கொடுத்து சிம் கார்டு வாங்கியதாக கேரளாவைச் சேர்ந்த சைனி, அனுப் மேத்யூ ஜார்ஜ் ஆகியோர் மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று சைனி ஆஜராகவில்லை. கோவை சிறையில் இருந்து அனுப் மேத்யூ ஜார்ஜ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு இங்கு ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கின் விசாரணையை பிப். 20க்கு நீதிபதி கஜரா ஆர் ஜி.ஜி. ஒத்தி வைத்தார்.

