/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தென்னக ரயில்வே மேலாளர் விருதுநகரில் ஆய்வு
/
தென்னக ரயில்வே மேலாளர் விருதுநகரில் ஆய்வு
ADDED : நவ 30, 2024 05:57 AM

விருதுநகர்; விருதுநகரில் இருந்து தென்னக ரயில்வே மேலாளர் ஆர்.என்.சிங்கின் ஆய்வு துவங்கியது.
சென்னையில் இரவு 8:40 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ்சில் புறப்பட்ட தென்னக ரயில்வே மேலாளர் ஆர்.என்.சிங், அதிகாலை 4:50 மணிக்கு விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அவர் உடன் வந்த ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்ஸவா ஸ்டேஷனில் ரூ.25 கோடியில் மூன்று கட்டங்களாக நடந்து வரும் புதுப்பிக்கும் கட்டுமான பணிகள், வாகன நிறுத்த வசதிகளை பார்வையிட்டார்.
காரைக்குடி, சிவகங்கை உள்ளிட்ட ஸ்டேஷன்களை ஆய்வு செய்வதற்கான ரயில் காத்திருந்தது. அதில் தென்னக ரயில்வே மேலாளர் ஆர்.என்.சிங்., மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்ஸவா ஏறினர். காலை 9:30 மணிக்கு ரயில் புறப்பட்டு சிவகங்கையை நோக்கி சென்றது. ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

