/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு விடுதி முன் தேங்கும் கழிவுநீர்
/
அரசு விடுதி முன் தேங்கும் கழிவுநீர்
ADDED : பிப் 09, 2024 03:50 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அரசு மாணவியர் விடுதி முன்பு, கழிவுநீர் தேங்கி கிடப்பதால் துர்நாற்றமும் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது.
அருப்புக்கோட்டை ரயில்வே பீடர் ரோட்டில் அரசு மாணவியர் விடுதி உள்ளது. இங்கு நகரை சுற்றியுள்ள பல கிராமங்களை சேர்ந்த மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
விடுதி முன்பு உள்ள மெயின்வடிகால் ஒன்றுதுார்வாரப்படாமலும் கழிவுநீர் தேங்கியும் கிடப்பதால் கடும் துர்நாற்றமும், பச்சை படர்ந்து சுகாதார கேடாக உள்ளது. நாற்றத்தை தொடர்ந்து சுவாசிக்கும் விடுதியில் தங்கியுள்ள மாணவிகளுக்கு சுவாச கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து, விடுதியை பராமரிப்பவர்கள் பல முறை நகராட்சிக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மாணவிகளின் நலன் கருதி, வாறுகாலை சுத்தம் செய்து, கழிவுநீர் தேங்காத வகையில் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

