ADDED : அக் 25, 2025 03:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் அதி துாதர் மிக்கேல்திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலையில் தேர் பவனி நடந்தது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் அதி துாதர் மிக்கேல் சொரூபம் வைக்கப்பட்டு சர்ச் வளாகத்தை சுற்றி வந்தனர். கிறிஸ்தவர்கள் ஏராள மானோர் கலந்து கொண் டனர்.
பாதிரியார் காந்தியடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலியும் மறையுரையும் நடந்தது. சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சாத்துார் ஆர்.சி தெரு, படந்தால், சூலக்கரை,அமீர் பாளையம் சிதம்பரம் நகர் ஹவுசிங் போர்டு காலனி புனித வியாகுல மாதா சபையினர் ஏராளமான பேர் விழாவில் கலந்து கொண்டனர்.

