/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோட்டோர கழிவுகள், தரைப்பாலத்தால் தவிப்பு ஸ்ரீவில்லிபுத்துார் மல்லி ஊராட்சி மக்கள்
/
ரோட்டோர கழிவுகள், தரைப்பாலத்தால் தவிப்பு ஸ்ரீவில்லிபுத்துார் மல்லி ஊராட்சி மக்கள்
ரோட்டோர கழிவுகள், தரைப்பாலத்தால் தவிப்பு ஸ்ரீவில்லிபுத்துார் மல்லி ஊராட்சி மக்கள்
ரோட்டோர கழிவுகள், தரைப்பாலத்தால் தவிப்பு ஸ்ரீவில்லிபுத்துார் மல்லி ஊராட்சி மக்கள்
ADDED : டிச 10, 2024 04:47 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியம் மல்லி ஊராட்சியில் ரோட்டோர கழிவுகளால் சுகாதாரக் கேடு, தரைப்பாலத்தால் தவிப்பு, சேதமடைந்த நிழற்குடையால் அச்சம், சுகாதார வளாகமின்றி சிரமம் போன்ற பல்வேறு குறைபாடுகள் காணப்படுகிறது.
இந்த ஊராட்சியில் உள்ள மல்லி, உள்ளூர் பட்டி, உள்ளூர் பட்டி காலனி, பண்டிதன்பட்டி, பழையபட்டி, பழைய பட்டி காலனி, ராமகிருஷ்ணாபுரம், அப்பயநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளனர். மெயின் ரோட்டில் உள்ளூர் பட்டி கண்மாயில் கழிவுகள் கொட்டி சுகாதாரக் கேடாக உள்ளது. இதனருகே பஸ் ஸ்டாப் இருப்பதால் அசுத்தமான சூழ்நிலையில்தான் மக்கள் பஸ்சிற்கு காத்திருக்கின்றனர். கிருஷ்ணன் கோயில் ரோட்டில் கழிவுகள் கொட்டப்பட்டு, ஊரணி புதர் மண்டி காணப்படுகிறது.
உள்ளூர் பட்டியில் மேல்நிலைப்பள்ளி முன்புறமுள்ள நீர்வரத்து ஓடையில் தடுப்பு சுவர் இல்லாமல் செடி கொடிகள் வளர்ந்தும் சுகாதாரக்கேடும், துவக்க பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கும் நிலை காணப்படுகிறது. ராமகிருஷ்ணாபுரம் விலக்கின் வடக்கு பகுதியில் உள்ள பயணியர் நிழற்குடை கட்டடம் சேதமடைந்துள்ளது. ராமகிருஷ்ணாபுரம் செல்லும் வழியில் சுடுகாடு உள்ள நிலையில் போதிய அளவிற்கு மின்விளக்கு வசதிகள் இல்லாததால் இரவு நேரங்களில் அச்சமான நிலை காணப்படுகிறது.
பண்டிதன்பட்டியில் இருந்து அப்பயநாயக்கன்பட்டி செல்லும் தார் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மல்லி பஜார் மெயின் ரோட்டில் சுகாதார வளாக வசதி இல்லாமல் வெளியூர் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இப்பகுதியில் துணை சுகாதார நிலையம் மட்டுமே உள்ளதால் அவசரகால மருத்துவ உதவிக்கு மக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

