/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரேஷன் அரிசி பறிமுதல்: இருவரிடம் விசாரணை
/
ரேஷன் அரிசி பறிமுதல்: இருவரிடம் விசாரணை
ADDED : நவ 20, 2024 02:42 AM

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே 1500 கிலோ ரேஷன் அரிசி மினிவேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த இருவரிடம் விசாரணை நடக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே சுந்தரபாண்டியத்தில் நேற்று அதிகாலை போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது ஒரு மினிலோடு வேனில் 30க்கும் மேற்பட்ட மூடைகளில் 1500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
அதில் வந்த மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தும்பைகுளம்
முத்துமாரியப்பன் 33, பேரையூர் செம்பட்டி முருகன் 40, ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில் சுந்தரபாண்டியம் சுற்றுவட்டார கிராமங்களில் வீடு, வீடாக ரேஷன் அரிசி விலைக்கு வாங்கி விற்பனைக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து அவற்றை வேனுடன் பறிமுதல் செய்து, பிடிபட்ட இருவரையும் கிருஷ்ணன் கோவில் போலீசார், மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையிடம் ஒப்படைத்தனர். மேல்விசாரணை நடக்கிறது.

