ADDED : டிச 18, 2025 05:53 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் அருகே எம்.ஜி.ஆர்., ரோட்டில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மதுரை - கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் வந்து செல்லும் முக்கிய வழியாக எம்.ஜி.ஆர்., ரோடு உள்ளது. இங்கு சீரமைப்பு பணிக்காக ரோடு தோண்டப்பட்டது.
அதில் மழைநீர் தேங்குவதுடன் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் சீரமைப்புப் பணி தடைபட்டுள்ளது.
இந்நிலை 3 மாதங்களுக்கு மேலாக நீடிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளா கின்றனர்.
ரோட்டை சீரமைக்க மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
