டூ வீலர்கள் மோதல்: டிரைவர் பலி
சாத்துார்: சாத்துார் மேலப்புதுாரைச் சேர்ந்தவர் முத்தையா மகன் விஜயகுமார் 38. லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சாத்துார் வந்தார். ஏழாயிரம் பண்ணை சாத்துார் ரோட்டில் நாராணாபுரம் விலக்கில் திரும்பிய போது ரோட்டின் ஓரத்தில் மேலப்புதுாரை சேர்ந்த வரதராஜ் இண்டிகேட்டர் போடாமல் நிறுத்தியிருந்த டூவீலர் மீது மோதி கீழே விழுந்து சம்பவ இடத்தில் பலியானார். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.
ரேஷன் கடை மிஷின் திருட்டு
சாத்துார்: சாத்துார் நடுவப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபால் 48. படந்தாலில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். அக்.18ல் ரேஷன் கடை பி.ஓ.எஸ்., மிஷினை சார்ஜருடன் வெள்ளை பையில் எடுத்துக்கொண்டு டூவீலரில் மரியன் ஊரணி பூங்காவிற்கு வந்தார். அங்கு மாலையில் நடைபயிற்சி முடித்துவிட்டு இரவு 9:00 மணிக்கு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக டூவீலரை எடுத்த போது டூவீலரில் வைத்திருந்த போஸ் மிஷின் திருடு போனது தெரிந்தது. சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

