மாணவர் மாயம்
சாத்துார்: சாத்துார் தாயில்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகசாமி லோடுவேன் டிரைவர் இவர் மகன் அருண், 19. பிளஸ் 2 படித்துவிட்டு தந்தையுடன் கிளீனராக வேலை பார்த்து வந்தார். விடுமுறை நாளான ஏப்.6 ல் விளையாடச் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றவர் மாயமானார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
மாயமானவர் எலும்பு கூடாக மீட்பு
சாத்துார்: ஆலங்குளம் அன்னபூரணியாபுரம் சேர்ந்தவர் அருணகிரி, 85. மார்ச் 29ல் தேன் எடுக்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு துரட்டி துாக்குச் சட்டியுடன் காட்டுப் பகுதிக்குச் சென்றவர் மாயமானார். கீழான்மறை நாடு வெங்கடேஸ்வரா பேப்பர் மில்லுக்கு சொந்தமான காட்டுப் பகுதியில் தேடிய போது அங்கு மண்டை ஓடும் எலும்புக்கூடும் கிடந்தது. முதியவர் அணிந்திருந்த சட்டை,வேட்டி, துாக்குசட்டியை வைத்து எலும்பு கூடாக கிடப்பது முதியவர் என்பது தெரிந்தது.ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கணவர் மாயம்: மனைவி புகார்
சாத்துார்: துாத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா, 27. இவர் கணவர் சங்கரநாராயணன்,34. இருவருக்கும் திருமணம் நடந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. 2பெண் குழந்தைகள் உள்ளது. 2024 ஜூன் 18 சாத்துாரில் ஜி ஆர் காம்பவுண்டில் இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர்.
சிவகாசியில் பணிபுரிந்து வந்த சங்கரநாராயணன் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றவர் மாயமானார்.சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

