விபத்தில் இருவர் காயம்
விருதுநகர்: விருதுநகர் டி.வாழவந்தாள் புரத்தை சேர்ந்தவர் அய்யனார் 55. இவர் மார்ச் 12ல் தனது டூவீலரில் உறவினர் குருவம்மாள் என்பவருடன் விருதுநகர் சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தார். மாலை 3:40 மணிக்கு விருதுநகர் சூலக்கரை மேட்டிற்கு அருகே புனித அந்தோணியார் சர்ச்சிற்கு அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் 30 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் டூவீலரை அதிகவேகமாக ஓட்டி வந்து மோதியதில் இருவரும் காயமடைந்தனர். மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
பட்டாசு திரி தீ விபத்து: பெண் படுகாயம்
சாத்துார்: தாயில்பட்டி ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கரன், 63. இவர் மனைவி விஜயலட்சுமி, 55. மார்ச்11ல் மாலை 6:30 மணிக்கு இருவரும் வீட்டில் அனுமதியின்றி பட்டாசு திரி உற்பத்தி செய்தனர். உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. லிஜயலட்சுமி படுகாயம் அடைந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார் வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
அ.தி.மு.க.வினர் மீது வழக்கு
சாத்துார்: சாத்துார் முக்குராந்தலில் அனுமதி இன்றி நேற்று முன்தினம் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டஅ.தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி தலைமையில் 50 பேர் நேற்று முன்தினம் முக்குராந்தல் பகுதியில் போதை பொருள் பரவலை தடுக்ககோரி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். முறையான அனுமதி பெறாமல் போக்குவரத்துக்கு இடையூறாகபிளக்ஸ் பேனர் வைத்ததோடு மனிதசங்கிலி அமைத்த 50 பேர் மீது எஸ்.ஐ., கேசவன் புகாரில் சாத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தற்கொலை
சிவகாசி: சிவகாசி திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் மாரி செல்வம் 36. இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி, மகளுடன் அவரின் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

