/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிக்கு துாண்கள் அமைக்கும் பணி நிறைவு
/
சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிக்கு துாண்கள் அமைக்கும் பணி நிறைவு
சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிக்கு துாண்கள் அமைக்கும் பணி நிறைவு
சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிக்கு துாண்கள் அமைக்கும் பணி நிறைவு
ADDED : டிச 12, 2024 04:54 AM

சிவகாசி: சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலத்திற்கான 17 துாண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில், நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் பாலத்தின் தரம், உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.
சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் சிவகாசி பெரியகுளம் கண்மாய் இரட்டை பாலம் முதல் சட்சியாபுரம் பஸ் ஸ்டாப் வரை 700 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.61.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.28 கோடி மதிப்பில் 23 பேரிடம் இருந்து 2,818 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் துவங்கியது. ரயில்வே தண்டவாளத்திற்கு கிழக்கு பக்கம் 11 துாண்கள், மேற்கு பக்கம் 6 துாண்கள் என மொத்தம் 17 தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதையடுத்து நேற்று மேம்பால பணிக்காக அமைக்கப்பட்ட துாண்களின் தரம், உறுதித் தன்மை குறித்து நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நவீன இயந்திரம் மூலம் பரிசோதனை செய்தனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் கூறுகையில், ரயில்வே மேம்பாலத்திற்கான 17 துாண்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்றதை அடுத்து தரக்கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அடுத்ததாக துாண்களை இணைக்கும் பீம் அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளது.
ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கான திட்ட காலம் 2025 டிச., வரை உள்ள நிலையில், திட்டமிட்ட காலத்தில் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும், என்றனர்.

