/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
1985ல் போலீசாக தேர்வு பெற்றோர் சந்திப்பு
/
1985ல் போலீசாக தேர்வு பெற்றோர் சந்திப்பு
ADDED : டிச 24, 2025 05:48 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: 1985ல் போலீசாராக வேலைக்கு தேர்வு பெற்று கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்து 40 ஆண்டுகளான நிலையில் மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூரில் சந்தித்துக் கொண்டனர் .
தமிழகத்தில் 1985ல் நடந்த போலீஸ் தேர்வில் சென்னை முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை பல்வேறு நகரங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட போலீசார் சிவகாசி ஆயுதப்படை மைதானத்தில் தேர்வாகினர். இவர்கள் 1985 டிசம்பர் 23 அன்று கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் பயிற்சிக்கு சேர்ந்தனர். தற்போது சப்-இன்ஸ்பெக்டர்களாக பணி ஓய்வு பெற்றனர்.
இந்நிலையில் தாங்கள் பயிற்சிக்கு சேர்ந்த நாளை கணக்கிட்டு 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே நாளில் ஸ்ரீவில்லிபுத்துாரில் ஓய்வு பெற்ற காவலர் நல சங்க அலுவலகத்தில் சந்தித்தனர்.
தங்களுடன் பயிற்சி பெற்று தற்போது இயற்கை எய்திய 23 நண்பர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினர். பின்னர் எதிர்கால திட்டமிடல் குறித்து கலந்துரையாடினர்.

