/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாலுாட்டும் அறையில் நாய்கள் தொல்லை, சேதமடைந்த கூரை பராமரிப்பு இன்றி விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட்

ADDED : பிப் 19, 2024 05:51 AM

விருதுநகர் : இடிந்து விழும் கூரை சிமெண்ட் பூச்சுகள், கால்நடை வளரும் இடமாக மாறிய தாய்மார்கள் பாலுாட்டடும் அறை, கடைகளின் ஆக்கிரமிப்புகளால் பஸ்சிற்கு காத்திருக்கும் மக்கள் வெயில், மழையில் நிற்கும் அவலம் என பல பிரச்னைகள் இருந்து பராமரிப்பு இல்லாமல் பாழாகும் நிலையில் விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளது.
விருதநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு செயல்பாட்டிற்கு வரும் போது பஸ்களும், மக்கள் தொகை எண்ணிக்கை குறைவாக இருந்தது. அதனால் பயன்படுத்துவதற்கு எவ்வித சிக்கலும் இல்லாமல் இருந்தது.
ஆனால் தற்போது மக்கள் தொகை எண்ணிக்கை உயர்ந்ததால் புறநகர், ஊரகப்பகுதிகளுக்கு அரசு, தனியார் பஸ்களின் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு ஆயிரக்கணக்கில் தினமும் மக்கள் வந்து செல்கின்றனர்.இந்த பஸ் ஸ்டாண்டில் மக்கள் அமருவதற்காக அமைக்கப்பட்டநிழற் குடை கூரையின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து பயணிகள் மீது விழுந்து காயத்தை ஏற்படுத்துகிறது. தாய்மார்கள் பாலுாட்டும் அறையில் கதவே இல்லை. இந்த அறையை தற்போது கால்நடைகள் தான் பயன்படுத்தி வருகின்றன.
பஸ் ஸ்டாண்டில் மக்களின் குடிநீருக்காக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பு பழுதாகி பல மாதங்களாக செயல்படாமல் உள்ளது.
பஸ் ஸ்டாண்ட் உள்ளே வாறுகால்களை சுத்தம் செய்வதற்காக கான்கீரிட் சிலாப்களில் அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகள் சேதமான நிலையில் இருப்பதால் குழந்தைகள், பெண்கள் கால் இடறி விழுகின்றனர். நிழற்குடையில் உள்ள இரும்பு நாற்காலிகள் போதுமானதாகவும், பராமரிப்பு இல்லாலும் உள்ளது.