/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் பயனாளிகளுக்கு முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் பெயர் மாற்றம் பெயர் திருத்தத்திற்காக காத்திருப்போர் அதிகரிப்பு
/
கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் பயனாளிகளுக்கு முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் பெயர் மாற்றம் பெயர் திருத்தத்திற்காக காத்திருப்போர் அதிகரிப்பு
கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் பயனாளிகளுக்கு முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் பெயர் மாற்றம் பெயர் திருத்தத்திற்காக காத்திருப்போர் அதிகரிப்பு
கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் பயனாளிகளுக்கு முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் பெயர் மாற்றம் பெயர் திருத்தத்திற்காக காத்திருப்போர் அதிகரிப்பு
ADDED : ஜூலை 23, 2025 12:22 AM
விருதுநகர்; விருதுநகர் மாவட்டத்தில் கலைஞர் காப்பீட்டு திட்டம் பெற்ற பயனாளிகளை தற்போது முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்கு மாற்றியதில் பலருக்கு பெயர் மாறியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாமல் பலரும் பாதிக்கபட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த தி.மு.க., ஆட்சியின் போது கலைஞர் காப்பீட்டு திட்டம் துவங்கப்பட்டு, அனைத்து ரேஷன் குடும்ப அட்டை தாரர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்த திட்டம் அடுத்து வந்த அ.தி.மு.க., ஆட்சியில் ஓரங்கட்டப்பட்டது.
ஆனால் மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் காப்பீட்டு திட்டம், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் என மாற்றப்பட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 5 லட்சத்திற்கு மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் உள்பட பலர் தகுதி அடிப்படையில் நீக்கப்பட்டனர்.
மேலும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டதால் அதில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் அப்படியே முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்கும் சேர்க்கப்பட்டது.
ஆனால் பரிசோதனை, சிகிச்சையை அரசு மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டில் எடுக்க வரும் போது குடும்ப தலைவரின் அலைபேசி எண்ணிற்கு வரும் ஓ.டி.பி., எண் பெற்று சரி பார்க்கும் போது தான் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் தாய், தந்தை பெயரில் முதல் எழுந்து மாறியிருப்பதும், தவறு நடந்திருப்பது தெரிகிறது.
இதை சரி செய்து வந்தால் மட்டுமே முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் பரிசோதனை, சிகிச்சை செய்ய முடிகிறது. இந்த பெயர் மாற்றத்தால் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள், கர்ப்பிணிகள் பலர் பரிசோதனை, சிகிச்சை பெற முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
இந்த பெயர் மாற்றத்திற்காக விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காப்பீட்டு திட்ட அட்டை எடுக்கும் மையத்தில் காத்திருப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மருத்துவ அவசரத்திற்காக பெயர் மாற்றத்திற்கு வருபவர்கள் மருத்துவரின் ஒப்புதல் ஆவணம் கொடுத்தால் மட்டுமே உடனடியாக திருத்தம் நடக்கிறது.
ஆனால் இது போன்ற முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் பெயர் மாற்றத்திற்காக 100க்கும் மேற்பட்டவர்கள் பல நாட்களாக காத்திருக்கின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து காப்பீட்டு திட்டத்தில் பெயர் மாற்றத்திற்காக காத்திருக்காமல் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

