/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஓடை ஆக்கிரமிப்பு செய்தோருக்கு நோட்டீஸ்
/
ஓடை ஆக்கிரமிப்பு செய்தோருக்கு நோட்டீஸ்
ADDED : டிச 11, 2024 04:55 AM
ராஜபாளையம் : ராஜபாளையம் பெரிய ஆதிகுளம் கண்மாய் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு குறித்து தினமலர் செய்தி எதிரொலியாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் குடியிருப்போர் நன்றி தெரிவித்துள்ளனர்.
ராஜபாளையம் சஞ்சீவி மலை அடிவாரத்தில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள பெரியாதி குளம் கண்மாய் வரை நீர்வரத்து கால்வாய் அமைந்துள்ளது. இதில் சங்கரன்கோவில் முக்கில் இருந்து ஐ.என்.டி.யூ.சி., அருகே வரை பல்வேறு வணிக நிறுவனங்கள் கட்டப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை ஒட்டியுள்ளதால் சம்பந்தப்பட்ட நிர்வாகம் சார்பில் 4 அடி நடைபாதைக்கு என ஒதுக்கியதற்கு பதிலாக 30 அடி அகலம் வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளால் அவசர காலங்களில் அடைப்புகளை எடுத்து விடும் பராமரிப்பு பணிகளை செய்ய முடியாததுடன் மழைக்காலங்களில் மெயின் ரோட்டில் கழிவு நீர் ஓடி வாகன ஓட்டிகளுக்கும் ரோட்டிற்கும் சிக்கல் ஏற்படுத்துவதுடன் முறையாக கண்மாய்க்கான நீர்வரத்து தடை படுகிறது.
இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிட்டதன் பயனாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முதல் கட்டமாக ஆக்கிரமிப்பாளர்கள் 12 பேருக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

