/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் பணிகள் தீவிரம்! தலா 21 பறக்கும்படை, கண்காணிப்பு குழுக்கள்
/
மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் பணிகள் தீவிரம்! தலா 21 பறக்கும்படை, கண்காணிப்பு குழுக்கள்
மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் பணிகள் தீவிரம்! தலா 21 பறக்கும்படை, கண்காணிப்பு குழுக்கள்
மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் பணிகள் தீவிரம்! தலா 21 பறக்கும்படை, கண்காணிப்பு குழுக்கள்
ADDED : மார் 19, 2024 05:41 AM
விருதுநகர் லோக்சபா தொகுதியில் ஆண்கள் 7 லட்சத்து 28 ஆயிரத்து 158 பேர், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 63 ஆயிரத்து 335, மூன்றாம் பாலினத்தவர் 202 என 14 லட்சத்து 91 ஆயிரத்து 695 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட 35 ஆயிரத்து 177 பெண்கள் உள்ளனர். 1680 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
மாவட்டம் முழுவதும் வட்டார கல்வி அலுவலர், தாலுகா சப்ளை அலுவலர், ஒன்றிய ஓவர்சீயர், துணை பி.டி.ஓ., போன்ற நிலைகளில் கொண்ட அலுவலர்கள் அடங்கிய 191 மண்டல குழுக்களில் 754 பேர் பணி புரிய மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் நடத்தை விதி, செலவினங்கள், அதிகப்படியான பண போக்குவரத்தை கண்காணிப்பது தொடர்பாக 21 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உதவி பொறியாளர், துணை பி.டி.ஓ., நிலையிலான அலுவலர்கள் ஆகியோர்தலைமையில் செயல்படும் இக்குழுவில் அலுவலர் ஒருவர் உட்படஒரு எஸ்.எஸ்.ஐ., 2 போலீசார், ஒரு ஒளிப்பதிவாளர் ஆகியோர் அடங்குவர்.
சட்டசபை தொகுதிக்கு 3 குழுக்கள் செயல்படுகின்றன. இதே போல்7 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் செயல்பாடுகளை உறுதி செய்ய7 வீடியோ பார்வையிடும் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.
தேர்தல் செலவினங்களை பார்வையிட நோடல் அலுவலராக நில எடுப்பு டி.ஆர்.ஓ., வீராச்சாமி நிர்ணயிக்கப்பட்டுள்ளார். உதவி நோடல் அலுவலராக கலெக்டரின் நேர்முக உதவியாளர் அக்கவுன்ட்ஸ் ராஜலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். அக்கவுன்டிங் பணிகளுக்காக 7 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமீறல்கள் உட்பட மிரட்டல்கள், சமூக விரோத செயல்கள், வாக்காளர்களுக்கு மது பாட்டில்கள், அதிகப்படியான பணம் கொண்டு செல்வதை கண்டறிய21 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பணிளுக்கான மனித வளம், பயிற்சி, பொருட்கள் மேலாண்மை, போக்குவரத்து, சைபர் பாதுகாப்பு, தகவல் தொழில் நுட்பம், தேர்தல் விழிப்புணர்வு பணிகள், சட்ட ஒழுங்கு, ஓட்டுப்பதிவு இயந்திர மேலாண்மை, செலவினம், தபால் ஓட்டு, ஊடகம், கட்டுப்பாட்டு அறை, ஓட்டு எண்ணும் மைய்கள், மாற்றுத்திறனாளிகள் வசதி ஏற்பாடுகள் என 22 நோடல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் 72.41 சதவீதம் ஓட்டுப்பதிவானது. இந்த முறை நுாறு சதவீதம் ஓட்டு பதிவை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வை செய்து வருகிறது.
விருதுநகர் லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (மார்ச் 20) முதல் துவங்குகிறது. வேட்புமனுக்கள் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டரால் பெறப்படும். வேட்புமனுக்களை தாக்கல் செய்ய விரும்புவோர் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். வேட்பு மனு, அதனுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் குறித்த விவரங்களை அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுபாட்டு மையத்தை அணுகலாம் என தேர்தல் அலுவலர் ஜெயசீலன் தெரிவித்தார்.

