/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு தேவை
/
காரியாபட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு தேவை
காரியாபட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு தேவை
காரியாபட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு தேவை
ADDED : பிப் 07, 2024 12:21 AM
காரியாபட்டி : காரியாபட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தி, கூடுதல் டாக்டர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு தினமும் 100க்கும் மேற்பட்ட உள் மற்றும் வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். காரியாபட்டியை சுற்றி உள்ள பகுதி மட்டுமின்றி, மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளிக்குடி ரோடு, அப்பகுதி உள்ள கிராமப்புறங்களில் ஏற்படும் விபத்து மற்றும் அவசரத்திற்கு காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கின்றனர். அதுமட்டுமின்றி, மதுரை -தூத்துக்குடி நான்கு வழி சாலை, நரிக்குடி, திருச்சுழி உள்ளிட்ட ரோடுகளில் அடிக்கடி விபத்துக்களில் சிக்குபவர்களையும் இங்கு அனுமதிக்கின்றனர்.
இங்கு முதலுதவி செய்து மதுரை, விருதுநகர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். இங்கு தீவிர சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலையில் மதுரை, விருதுநகர் கொண்டு செல்லும் வழியில் உயிர் இழக்கின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வசதியாக காரியாபட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தி, தேவையான உபகரணங்களுடன் கூடுதல் டாக்டர்களை நியமித்து தீவிர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

