/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அதிக எடை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள்; விபத்து அபாயத்தை தடுக்க தேவை நடவடிக்கை
/
அதிக எடை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள்; விபத்து அபாயத்தை தடுக்க தேவை நடவடிக்கை
அதிக எடை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள்; விபத்து அபாயத்தை தடுக்க தேவை நடவடிக்கை
அதிக எடை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள்; விபத்து அபாயத்தை தடுக்க தேவை நடவடிக்கை
ADDED : மார் 26, 2024 11:51 PM
விருதுநகர் மாவட்டம் தொழில் மாவட்டம் என்பதால் நகரப்பகுதிகளில் லாரிகள் அதிகஅளவில் உள்ளன. பருப்பு, வத்தல், அட்டை, வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட சரக்குகள் ஏற்றி இறக்கப்படுகிறது.
நான்கு வழிச்சாலை அருகில் இருப்பதால் விருதுநகர் வந்து சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கனரக வாகனங்கள் செல்கின்றன. அவ்வாறு செல்லும் பல வாகனங்கள் அதிகளவில் எடை ஏற்றி செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
கண்காணிப்பில் ஈடுபட வேண்டிய வட்டார போக்குவரத்து துறையும் பெயரளவிலே ஆய்வு செய்வதால் நாளுக்கு நாள் விபத்து அபாயம் பெருகி வருகிறது.
கனரக வாகனங்களில் 1 அச்சில் 8 டன், 2 அச்சில் 18.5 டன், 3 அச்சில் 28 டன் என லாரியுடன் சேர்த்த எடை அளவில் தான் சரக்குகள்ஏற்றப்பட வேண்டும். இந்த குறிப்பிட்ட எடையளவில் ஒரு டன் கூடினாலும் ரூ.22 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
எடை அதிகளவில் ஏற்றப்படுவதால் லாரி ஓட்டுனர்களும் லாரியை கட்டுபாட்டில் வைக்க தவறுகின்றனர். நகரில் இருந்து நான்கு வழிச்சாலை வருவதற்குள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வட்டார போக்குவரத்து துறையினர் கூறுகையில், அதிக எடை ஏற்றுவதால் ரோடு சேதம் அதிகமாகிறது. மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட, நகர்ப்புற ரோடுகள் அதிகளவில் பாதிப்பை சந்திக்கின்றன. அதிக பளு ஏற்றுவதால் வாகனத்தை நிறுத்த பிரேக் போடும் போதெல்லாம் வாகனம் நிலைகுலைகிறது. இதனால் நாளடைவில் பிரேக்கின் திறன் குறைந்து விடுகிறது.
மத்திய அரசின் ஏ.ஆர்.ஐ., ஒவ்வொரு வாகனத்திற்கும் குறிப்பிட்ட அளவு எடை தாங்கும் திறன் தான் பரிந்துரைத்திருக்கும். அதை தாண்டி ஏற்றும் போது வாகனங்களில் பழுதும் ஏற்படுகிறது. ஆகவே கனரக வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் அனுமதிக்கப்ட்ட அளவில் மட்டுமே எடை ஏற்றி செல்ல வேண்டும் என்றனர்.

