/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பண்டிகை காலங்களில் தலைவலி தரும் ஆக்கிரமிப்புகள் நெரிசலில் விழிபிதுங்கும் மக்கள்
/
பண்டிகை காலங்களில் தலைவலி தரும் ஆக்கிரமிப்புகள் நெரிசலில் விழிபிதுங்கும் மக்கள்
பண்டிகை காலங்களில் தலைவலி தரும் ஆக்கிரமிப்புகள் நெரிசலில் விழிபிதுங்கும் மக்கள்
பண்டிகை காலங்களில் தலைவலி தரும் ஆக்கிரமிப்புகள் நெரிசலில் விழிபிதுங்கும் மக்கள்
ADDED : அக் 12, 2024 04:14 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட முக்கிய நகர்களின்மெயின் பஜார்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து இடநெருக்கடி பெருகி உள்ளது. பண்டிகை கால பொருட்கள் வாங்க வரும் மக்கள் நெரிசலில் விழிபிதுங்குகின்றனர். போலீசாரும், நகராட்சிகளும்வேடிக்கை பாரப்பதோடு சரி எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
விருதுநகர் மெயின் பஜார் முக்கிய வணிக தளமாகவும், பல தலைமுறை பாரம்பரிய கடைகளையும் கொண்டுள்ளது.
இந்த பஜாரில் 5 ஆண்டுகளாக அதிகளவில் ஆக்கிரமிப்புகள் பெருகி உள்ளன.
இதே சூழல் தான் சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்துார், ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் நகரங்களிலும் உள்ளது.
தங்கள் கடைகளை தாண்டி ரோட்டிலும் பொருட்களை வைத்து விற்பது தான் இந்த நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
பலர் போட்டி போட்டு 2 அடி, மூன்று அடி என ஆக்கிரமித்து பஜார்களைபோக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாற்றவிட்டனர். இதனால் மக்களால் நடமாடவே முடிவதில்லை. குறுகிய இடம், இடநெருக்கடியால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நகராட்சி, போலீசாரால் பெயருக்கு ஆக்கிரமிப்பு அகற்றம் நடக்கும். பின் மீண்டும் முளைத்து விடும். இது சம்பிரதாயமாகவே உள்ளது. தற்போது பண்டிகை காலங்களில் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
நகரின் அமைப்புக்காக நகராட்சிகளில் பணிபுரியும் அலுவலர்கள் என்ன செய்கின்றனர் என தெரியவில்லை.
எப்போதும் நெருக்கடியோடு மிகுந்த மோசமான நிலையில் இருக்கும் பஜார்களில் அவசரம் என்றால் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட வர முடியாது.
எனவே பண்டிகை காலத்தில் மக்களின் தேவையை உணர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றத்தை தீவிரப்படுத்தி சரி செய்ய வேண்டும்.

