/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குப்பை மேடுகளா நான்கு வழிச்சாலை ஓரங்கள்.. 'கப்' தாங்கல
/
குப்பை மேடுகளா நான்கு வழிச்சாலை ஓரங்கள்.. 'கப்' தாங்கல
குப்பை மேடுகளா நான்கு வழிச்சாலை ஓரங்கள்.. 'கப்' தாங்கல
குப்பை மேடுகளா நான்கு வழிச்சாலை ஓரங்கள்.. 'கப்' தாங்கல
ADDED : மார் 12, 2024 05:58 AM
விருதுநகர் மாவட்டத்தில் மதுரையில் இருந்து துாத்துக்குடிக்கு காரியாபட்டி அருப்புக்கோட்டை வழியாகவும், மதுரையில் இருந்து கன்னியாகுமரிக்கு விருதுநகர், சாத்துார் வழியாகவும் நான்கு வழிச்சாலைகள் செல்கின்றன.
வணிகத்திற்கு முக்கியமான இந்த ரோடுகள் ஓரங்கள் தற்போது குப்பை மேடு போல் மாறி வருகின்றன. மக்கள் கண்டதை ஆங்காங்கே துாக்கி வீசுவதும், ஊராட்சி நிர்வாகங்கள் இரவோடு இரவாக குப்பை, கட்டுமான கழிவுகளை கொட்டுவதும் அதிகரித்து வருகிறது.
மாநகராட்சி 1, நகராட்சிகள் 5, பேரூராட்சிகள் 9, ஊராட்சிகள் 450 என உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் மாநகராட்சி, நகராட்சிகளில் மட்டும் தான் குப்பை பிரித்து அகற்றப்படுகின்றன. இருப்பினும் மற்ற பகுதிகளில் குப்பை அகற்றம், மேலாண்மை கேள்விக்குறி தான்.
அதே போல் புதிதாக கட்டடம் கட்டுவோர் இடிக்கப்பட்ட கட்டட கழிவுகளையும் ரோட்டின் ஓரங்களில் கொட்டி செல்கின்றனர். இதை பார்க்கும் மற்றவர்களும் கொட்டுவதால் நான்கு வழிச்சாலையில் குறிப்பிட்ட சில இடங்களில் கட்டட கழிவுகள் அதிகம் உள்ளன. இதனால் பசுமை சாலைக்கு நடப்பட்ட மரங்களும் பாதிப்பை சந்திக்கின்றன.
சில உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள் சேகரமாகும் குப்பையை இரவோடு, இரவாக ரோட்டின் ஓரத்தில் கொட்டி விட்டு செல்கின்றனர். இன்னும் சிலர் பழைய மெத்தை, தலையணை என பழைய வீட்டு பொருட்களையும் துாக்கி எறிந்து செல்கின்றனர்.
இதனால் நான்கு வழிச்சாலை ஓரங்களில் சுகாதாரக்கேடு அதிகளவில் உள்ளது. துர்நாற்றம் அடிக்கிறது.நான்கு வழிச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் தான் அவதிப்படுகின்றனர்.
இதை எந்நேரமும் கண்காணிக்க முடியாது என்பதால் மாவட்ட நிரவாகம் வழித்தடங்களில் உள்ளாட்சி அமைப்புகளிடம் அறிவுறுத்துவதுடன், பிடிபட்டால் கண்டித்து அபராதம் விதிக்கவும் வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே நான்கு வழிச்சாலை ஓரங்களில் குப்பை கொட்டுவது கட்டுப்படுத்தப்படும்.

