/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பசுமை பரப்பை அதிகரிக்க 93 ஆயிரம் மரக்கன்றுகள் வனத்துறை தீவிரம்
/
பசுமை பரப்பை அதிகரிக்க 93 ஆயிரம் மரக்கன்றுகள் வனத்துறை தீவிரம்
பசுமை பரப்பை அதிகரிக்க 93 ஆயிரம் மரக்கன்றுகள் வனத்துறை தீவிரம்
பசுமை பரப்பை அதிகரிக்க 93 ஆயிரம் மரக்கன்றுகள் வனத்துறை தீவிரம்
ADDED : ஜூலை 21, 2025 02:09 AM

21ம் நூற்றாண்டில் அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப விளைநிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாறி குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது.
இதற்காக நுாற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள் அப்புறப்படுத்தப்படுவதால் மாநிலத்தில் பசுமை பரப்பு என்பது 33 சதவீதம் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 23.8 சதவீதம் தான் உள்ளது. இதனால் எதிர்காலத்தில் காற்று மாசுபடுதல், புவி வெப்பம் அதிகரித்தல், தூய்மையான காற்று இல்லாமல் மக்கள் நோய் பாதிப்புக்கு ஆளாகுதல் போன்ற பெரும் சவால்கள் எழும் அபாயம் உள்ளது.
இதை தவிர்க்க மரங்களை அதிகப்படுத்த விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் சார்பில் நகரங்கள் தோறும் அதிக மரக்கன்றுகளை நடத் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஸ்ரீவில்லிபுத்துார் வன விரிவாக்க மையத்தில் உள்ள நாற்றங்கால் பண்ணையில் புங்கன், வாகை, வேம்பு, நாவல், மகிழம், அத்தி, மந்தாரை, தான்றி, நீர் மருது, பாதாம், தேக்கு உட்பட 93 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வகை மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனை உதவி வன பாதுகாவலர் ஞானப்பழம் தலைமையிலான வனத்துறையினர் தினமும் கண்காணித்து வருகின்றனர்.
இதில் மகாகனி, தேக்கு, வேங்கை போன்ற மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் வளர்க்கப்படும் போது எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக பேருதவியாக கை கொடுக்கும். இந்த மரக்கன்றுகள் நீதித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை உட்பட பல்வேறு அரசுத் துறையில் மூலம் வழங்கப்பட்டு நடப்பட்டு வளர்க்கப்படவுள்ளது. வரும் அக்டோபர் முதல் மழைக்காலம் துவங்கும் போது இந்த 93 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட உள்ளது.
தற்போது முன்மாதிரியாக நீதித்துறை மூலம் ஆயிரம் மரக்கன்றுகள் விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்திலும், நீதிமன்ற வளாகத்திலும் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இதே போல் மாவட்டத்தில் அனைத்து நகரங்களிலும் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து பராமரித்தால், பசுமை பரப்பு அதிகரித்து இத்திட்டத்தின் நோக்கம் நிறைவேறும்.

