/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெரிய கண்மாய் கரையை பலப்படுத்த எதிர்பார்ப்பு
/
பெரிய கண்மாய் கரையை பலப்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : டிச 24, 2025 05:50 AM

சாத்துார்: சாத்துார் மேலமடை பெரிய கண்மாய் பாசனத்தின் மூலம் விவசாயிகள் நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிர் செய்து வருகின்றனர். கண்மாயில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குடிமராமத்து பணி நடந்தது. இதன் பின்னர் பராமரிப்பு பணி ஏதும் நடைபெறவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக கன்மாய் கரைகளில் ஆங்காங்கே மண்ணரிப்பு ஏற்பட்டு உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த உடைப்புகளை விவசாயிகளே மண்ணை கொட்டி சரி செய்து வருகின்றனர்.தொடர்ந்து மழை பெய்யும் போது இந்த மண்ணரிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு கண்மாய்க் கரையை பலப்படுத்த வேண்டும். மேலும் மண்ணரிப்பு ஏற்படாத வகையில் கரைப்பகுதியில் கற்கள் பதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

