/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புதர்மண்டி வரும் ஏழாயிரம்பண்ணை ஆரம்ப சுகாதார நிலையம்
/
புதர்மண்டி வரும் ஏழாயிரம்பண்ணை ஆரம்ப சுகாதார நிலையம்
புதர்மண்டி வரும் ஏழாயிரம்பண்ணை ஆரம்ப சுகாதார நிலையம்
புதர்மண்டி வரும் ஏழாயிரம்பண்ணை ஆரம்ப சுகாதார நிலையம்
ADDED : பிப் 19, 2024 05:45 AM

சாத்துார், : ஏழாயிரம் பண்ணை அரசு ஆரம்பசுகாதாரநிலையம் புதர் மண்டியுள்ளதால் இதனை சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஏழாயிரம்பண்ணை, கரிசல்பட்டி, நைனாபுரம், ரெட்டியபட்டி, சங்கரபாண்டியாபுரம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் ஏழாயிரம்பண்ணையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்
நாள் தோறும் 600-க்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முறையான பராமரிப்பு இன்றி மரம், செடி, கொடிகள் சூழ்ந்து புதர் மண்டிய நிலையில் காணப்படுகிறது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றிலும் முழுமையான சுற்றுச்சுவர் இல்லை. ஒரு பாதி மட்டுமே காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டுள்ளது.
மூன்று பக்கத்திலும் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. கம்பி வேலியை சுற்றிலும் கொடிகள் படர்ந்து பொருட்கள் முளைத்து காணப்படுகின்றன. இவை பாம்பு, தேள், பூரான், போன்ற விஷ பூச்சிகளுக்கு புகலிடமாக அமைந்துள்ளது.
காடு போல வளர்ந்துள்ள மரம், செடி கொடிகளில் தஞ்சம் அடைந்துள்ள விஷ பூச்சிகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் எளிதாக புகும் அபாயம் உள்ளது.
இதனால் இங்கு தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளும் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் ஆகியோர் விஷ பூச்சிகளின் தாக்குதலுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது.
நான்கு புறமும் அடர்த்தியாக வளர்ந்துள்ள முள் செடிகள் உள்ளிட்ட தேவையற்ற செடிகளை அகற்றுவதோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முழுமையான அளவில் சுற்றுச்சுவர் கட்டித் தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

