/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
லோக்சபா தேர்தல் வருவதை ஒட்டி வீடு தோறும் இலவச பொருட்களை அள்ளி விடும் தி.மு.க., வினர்

ADDED : பிப் 28, 2024 07:02 AM
அருப்புக்கோட்டை : லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அருப்புக்கோட்டை நகராட்சி வார்டுகளில் தி.மு.க., நிர்வாகிகள் வீட்டுக்கு வீடு இலவச பொருட்களை வழங்கி வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் ஆலோசனை கூட்டங்கள், நிர்வாகிகள் கூட்டம் என்ன நடத்தி வருகின்றன. இதில் தி.மு.க.,வும் மாவட்ட அளவில் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், அருப்புக்கோட்டையில் ஒரு சில நகராட்சி வார்டுகளில் உள்ள நிர்வாகிகள் வீட்டுக்கு வீடு இலவச பொருட்களை வழங்கி வருகின்றனர். 2 மாதங்களுக்கு முன்பு, தக்காளி விலை ஒரு கிலோ 100 ரூபாயாக இருந்தது. தக்காளி வாங்க பெண்கள் தயங்கிய நிலையில் வீட்டிற்கு வீடு 1 கிலோ தக்காளி வழங்கியுள்ளனர். போன மாதம் துவரம்பருப்பு 1 கிலோவும், இந்த வாரம் கடலெண்ணெய் 1 கிலோவும் வழங்கியுள்ளனர்.
ஏற்கனவே, தெருக்களில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட ரோடு சரி செய்யாமல் இருப்பதாலும், குடிநீர் சரிவர வராமல் இருப்பதாலும் உட்பட பல பிரச்சனைகளில் மக்கள் அதிருப்தியில் இருப்பதால், வரும்தேர்தலில் ஓட்டு வங்கி பாதிக்கப்படுமோ என்ற பயத்தில் திமுக., நிர்வாகிகள் இலவச பொருட்களை கொடுத்து வருகின்றனர்.
இது, மற்ற வார்டுகளிலும் எதிரொலிப்பதால் அந்தப் பகுதியில் உள்ள தி.மு.க., நிர்வாகிகள் நம் வார்டு மக்களுக்கு என்ன கொடுப்பது என தெரியாமல் முழித்துக் கொண்டு உள்ளனர்.