நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் கணினி அறிவியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பிரிவு உபச்சார விழா நடந்தது. முன்னாள் மாணவர் சக்திவேல் வரவேற்றார். முதல்வர் சாரதி தலைமை வகித்தார்.
துறைத் தலைவர் கதிர்வளவக்குமார், பேராசிரியர்கள் கிறிஸ்டோபர் துரைராஜ், பழனியப்பன் ஆகியோரது பணி நினைவுகள் குறித்து மாணவர்கள் பேசினர். ஓய்வு பெறுபவர்கள் ஏற்புரை வழங்கி சிறந்த முன்னாள் மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.
கல்லுாரித் தலைவர் சம்பத்குமார், செயலாளர் மகேஷ் பாபு, உப தலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, குமரன் ஆகியோர் பாராட்டினர்.

