/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர் பக்தர்கள் எதிர்பார்ப்பு
/
பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர் பக்தர்கள் எதிர்பார்ப்பு
பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர் பக்தர்கள் எதிர்பார்ப்பு
பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர் பக்தர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 07, 2026 05:50 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பழநி, திருச்செந்துாருக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அருப்புக்கோட்டை, காரியாபட்டி, விருதுநகர், சாத்துார், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார் ஆகிய நகர் பகுதிகள், அதனை சுற்றிய புறநகர், ஊரகப்பகுதிகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பழநி, திருச்செந்துார் முருகன் கோயில்களுக்கு மாலை அணிந்து பாதயாத்திரையாக பக்தர்கள் செல்வது வழக்கம்.
கடந்த ஆண்டுகளை விட நடப்பாண்டு ஆங்கில புத்தாண்டில் அதிக அளவிலான பக்தர்கள் கோயில்களுக்கு சென்றனர். மேலும் பொங்கல், தைப்பூசம், மாசித்திருவிழா, வைகாசி விசாகம் ஆகிய விசேஷ நாட்களில் இன்னும் அதிகமானபக்தர்கள் பாதயாத்திரையாக செல்ல உள்ளனர்.
இவர்கள் பெரும் பாலும் இரவு, அதிகாலை நேரங்களில் நடந்தும், பகலில் ஓய்வு எடுத்து தொடர்ந்து நடந்து செல்வார்கள். இரவு, அதிகாலையில் ரோடு ஓரங்களில் செல்லும் போது கனரக வாகனங்கள், கார்கள் மோதுவதால் விபத்து ஏற்பட்டு கடந்தாண்டு பக்தர்கள் சிலர் பலியாகினர்.
இப்படி கார்கள் மோதுவதால் பக்தர்கள் பலியாவதை தடுப்பதற்கான விழிப்புணர்வு, அவர்களுக்கு ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கரை வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் இதுவரை மாவட்டத்தில் இருந்து பழநி, திருச்செந்துாருக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு விழிப்புணர்வு, ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர் வழங்கப் படவில்லை.
எனவே பொங்கலுக்கு அதிக அளவிலான பக்தர்கள் பாதயாத்திரை செல்ல உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

