/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆ.ராஜா எம்.பி.,யை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
ஆ.ராஜா எம்.பி.,யை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 26, 2024 01:02 AM
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் குறித்து அவதுாறாக பேசிய ஆ.ராஜாவை கண்டித்து ஏழு ஊர் வீரக்கொடி வேளாளர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மம்சாபுரம், துலுக்கன் குளம், வாகைகுளம் பட்டி, வைத்திலிங்கபுரம், அய்யனாபுரம் உட்பட ஏழு கிராம வீரக்குடி வெள்ளாளர் உறவின்முறையை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோர் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் நேரு சிலை எதிரே ஆ. ராசாவை கண்டித்தும், கைது செய்ய வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெள்ளாளர் முன்னேற்ற கழக நிர்வாகி சரவணன் தலைமை வகித்தார்.
ஏழுார் தலைவர் ஆறுமுகம், செயலாளர் வைஷாலி, துணை செயலாளர் லட்சுமண பெருமாள் முன்னிலை வகித்தனர். ஊர் தலைவர்கள் தலைமலை, மகேஸ்வரன், மாரிமுத்து, வீரப்பன், குருசாமி, குமார் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

