/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பிசிண்டி துவக்கப்பள்ளியில் ஆபத்தான சுற்றுச் சுவர்: அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு

ADDED : டிச 21, 2025 05:56 AM

காரியாபட்டி: காரியாபட்டி பிசிண்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து, அப்புறப்படுத்தாமல் உள்ளது. மீதமுள்ள சுவரும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் முன், அப்புறப்படுத்தி, புதிய சுவர் கட்ட வேண்டும் என பெற்றோர்எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி பிசிண்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 80 மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது. தரமில்லாமல் கட்டியதால் சில ஆண்டுகளிலே இடிந்து விழுந்தது. அதனை அப்புறப்படுத்தாமல் அப்படியே கிடப்பில் போட்டனர். தற்போது திறந்த வெளியாக இருப்பதுடன், சமூக விரோத செயல்கள் நடக்கின்றன.
மீதமுள்ள சுற்றுச் சுவர் எப்போது இடிந்து விழுமோ என்கிற ஆபத்தான சூழ்நிலை இருந்து வருகிறது, அப்பகுதியில் மாணவர்கள் விளையாடி வருவதால் விபத்து அச்சம் உள்ளது. விபத்திற்கு முன் அப்புறப்படுத்தி, புதிய சுற்றுச் சுவர் கட்ட வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.