/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இடிந்த மறவர் பெருங்குடி பள்ளி சுற்றுச்சுவரை கட்டாததால் பாதிப்பு
/
இடிந்த மறவர் பெருங்குடி பள்ளி சுற்றுச்சுவரை கட்டாததால் பாதிப்பு
இடிந்த மறவர் பெருங்குடி பள்ளி சுற்றுச்சுவரை கட்டாததால் பாதிப்பு
இடிந்த மறவர் பெருங்குடி பள்ளி சுற்றுச்சுவரை கட்டாததால் பாதிப்பு
ADDED : டிச 22, 2025 06:02 AM

திருச்சுழி: திருச்சுழி அருகே மறவர் பெருங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து ஆண்டுகள் கடந்தும் சரி செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் எம்.ரெட்டியபட்டி ஊராட்சிக்குட்பட்டது மறவர் பெருங்குடி. இங்கு உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுத்தமடம், கஞ்சம்பட்டி, சலுக்குவார்பட்டி, கல்லுப்பட்டி, புங்க மரத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 220 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையால் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
ஒரு ஆண்டுக்கு முன்பு பெய்த தொடர் மழையில் முன் பக்கம் உள்ள சுற்றுச்சுவரும் முழுமையாக உடைந்தது. பள்ளி வளாகத்திற்குள் ஆடு, மாடுகள் உலா வருகின்றன. மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இரவு நேரங்களில் குடிமகன்கள் இங்கு வந்து குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்து போட்டு விடுகின்றனர். பள்ளிக்கு சுற்று சுவர் கட்ட கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கை இல்லை.