/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொடரும் குழாய் உடைப்பு- --தீர்விற்கு மக்கள் எதிர்பார்ப்பு
/
தொடரும் குழாய் உடைப்பு- --தீர்விற்கு மக்கள் எதிர்பார்ப்பு
தொடரும் குழாய் உடைப்பு- --தீர்விற்கு மக்கள் எதிர்பார்ப்பு
தொடரும் குழாய் உடைப்பு- --தீர்விற்கு மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 08, 2024 12:21 PM

தளவாய்புரம: செட்டியார்பட்டி முகவூர் மெயின் ரோட்டில் 4 வருடங்களுக்கும் மேல் தொடரும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் உடைப்பிற்கு தீர்வு காணப்படாததால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
செட்டியார்பட்டி அடுத்த முகவூர் வழியே சேர்த்துாருக்கு மெயின் ரோடு உள்ளது. இப்பகுதியில் தார் ரோடு மீது அமைக்கப்பட்ட பேவர் பிளாக் ரோட்டின் கீழ் தாமிரபரணி குடிநீர் குழாய் செல்கிறது.
காமராஜர் சிலை அருகில் இருந்து முத்துச்சாமிபுரம் கூட்டுறவு அலுவலகம் வரை கடந்த 4 வருடங்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுவதும் அதிலிருந்து தண்ணீர் வெளியேறி சாக்கடையுடன் கலப்பதும், இதை சரி செய்ய ரோட்டை தோண்டி ரோடு குண்டும் குழியுமாக பாழாவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
சாலையை பகுதியை கடக்கும் மாணவர்கள், வாகனங்கள், பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இத்துடன் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீரும் யாருக்கும் உபயோகம் இன்றி வழிந்தோடுகிறது.
தீர்வே காணப்படாமல் தொடரும் இப் பிரச்சினைக்கு முடிவு காண்பதுடன் பொதுமக்கள் வரிப்பணம் வீணாவதை தடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

