ADDED : டிச 11, 2024 02:48 AM

அருப்புக்கோட்டை,:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் கட்டட தொழிலாளி மங்கையன் 40, எரித்து கொலை செய்யப்பட்டார்.
பாலையம்பட்டி வடக்குத்தெரு மடம் அருகில் இருந்த புதருக்குள் விறகுகள் எரிந்து புகை வெளிவந்துள்ளது.
அப்பகுதி மக்கள் பார்த்ததில் ஆண் ஒருவர் எரிந்த நிலையில் எலும்பு கூடாக கிடந்தார். அருகில் ரத்தம் வடிந்த நிலையில் ஒரு பெரிய கல் இருந்துள்ளது. இதுகுறித்து போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது.
ஏ.எஸ்.பி., மதிவாணன் மற்றும் போலீசார் ரத்த மாதிரிகள், கொலைக்கு பயன்படுத்திய கல், எரிந்த எலும்புகள் ஆகியவற்றை சேகரித்து விசாரித்தனர். மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை போலீசார் சேகரித்தனர்.
விசாரணையில் கொலையானவர் வடக்குத் தெருவைச் சேர்ந்த கட்டட தொழிலாளி மங்கையன் என்பதும், குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதும் தெரிந்தது. அவரை யார் கொலை செய்தனர் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

