/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அக்.27, 28, 29ல் வார்டு குழுக்கூட்டம் கலெக்டர் அறிவிப்பு
/
அக்.27, 28, 29ல் வார்டு குழுக்கூட்டம் கலெக்டர் அறிவிப்பு
அக்.27, 28, 29ல் வார்டு குழுக்கூட்டம் கலெக்டர் அறிவிப்பு
அக்.27, 28, 29ல் வார்டு குழுக்கூட்டம் கலெக்டர் அறிவிப்பு
ADDED : அக் 25, 2025 03:52 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்த வார்டு சிறப்பு குழுக்கூட்டம் அக். 27, 28, 29 ஆகிய நாட்களில் நடக்கும் என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு: இக்கூட்டத்தில் நகராட்சிப் பகுதிகளில் குடிநீர் வழங்கல், குப்பை, தெருவிளக்கு, ரோடுகள், பூங்கா, மழைநீர் வடிகால்கள் உள்ளிட்டவை பற்றி விவாதிக்கலாம்.
நகராட்சி பள்ளிகளில் சுகாதாரம், அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் குறித்தும், நீர்நிலைகள் மாசு ஏற்படாமல் இருக்கவும் நீராதாரங்களை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கலாம்.
ஏதேனும் மூன்று கோரிக்கைகள் மட்டும் செயல்படுத்தும் விதமாக அக்கோரிக்கைகளை பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அக். 27, 28, 29 ஆகிய நாட்களில் சிறப்பு வார்டு குழுக்கூட்டத்தில் மக்கள், கவுன்சிலர்கள் பங்கேற்க வேண்டும்.
கோரிக்கைகளை தீர்மானமாக இயற்றி “முதல்வரின் முகவரி மனு” என்ற அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும், என்றார்.

