/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா
/
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா
ADDED : மார் 02, 2024 05:15 AM

சிவகாசி : சிவகாசியில் மாநகர தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலினின் 71 வது பிறந்த நாள் விழாவில் தி.மு.க., வினர் கட்சி கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.
சிவகாசியில், மாநகர திமுக சார்பில், முதல்வர் ஸ்டாலின் 71வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும் மாநகர தி.மு.க., செயலாளர் எஸ்.ஏ.உதயசூரியன், மேயர் சங்கீதா தலைமையில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்கினர்.
மேலும் பள்ளி குழந்தைகளுக்கு எழுது பொருள்கள், நோட்டு புத்தகங்கள், வழங்கப்பட்டது. திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு பால் பவுடர், ரொட்டி வழங்கப்பட்டது.
துாய்மை பணியாளர்களுக்கு அரிசிப்பை வழங்கப்பட்டது. மண்டல தலைவர் அழகு மயில், முன்னாள் நகர் சேர்மன் பொன் சக்திவேல், துணை மேயர் விக்னேஷ்பிரியா கட்சியினர் கலந்து கொண்டனர்.
*சிவகாசி ஒன்றியத்தில், வடக்கு மாவட்டம், ஒன்றிய தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலின் 71 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் வனராஜா தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் விவேகன்ராஜ் முன்னிலை வகித்தார்.
சாட்சியாபுரம் சி.எம்.எஸ். பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
சாட்சியாபுரம், விஸ்வநத்தத்தில் துாய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை சாமான்கள் வழங்கப்பட்டது.
ரிசர்வ் லைன் அரசு பள்ளி, வடபட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு, நோட்டு புத்தகங்கள், பேனா வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர்கள் தங்கராஜ், கோபிகண்ணன், கட்சியினர் கலந்து கொண்டனர்.

