/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வத்திராயிருப்பு பஸ் ஸ்டாண்ட்டை புறக்கணிக்கும் பஸ்களால் அவதி
/
வத்திராயிருப்பு பஸ் ஸ்டாண்ட்டை புறக்கணிக்கும் பஸ்களால் அவதி
வத்திராயிருப்பு பஸ் ஸ்டாண்ட்டை புறக்கணிக்கும் பஸ்களால் அவதி
வத்திராயிருப்பு பஸ் ஸ்டாண்ட்டை புறக்கணிக்கும் பஸ்களால் அவதி
ADDED : ஜன 05, 2026 05:26 AM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பஸ் ஸ்டாண்டிற்கு அனைத்து பஸ்களும் வந்து செல்லாததால் சுற்று வட்டார கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
வத்திராயிருப்பில் பஸ் ஸ்டாண்டை சுற்றி போலீஸ் ஸ்டேஷன், தாலுகா அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு மருத்துவமனை, நீதிமன்றம் உள்ளது.
இத்தாலுகாவில் உள்ள 4 பேரூராட்சிகள், 29 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் தினமும் அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் மதுரை, தேனி, விருதுநகரில் இருந்து வரும் தனியார் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்கு வராமல் முத்தாலம்மன் பஜாரில் நிறுத்தப்படுகிறது.
இதேபோல் இலந்தகுளம், கோட்டையூர், தம்பிபட்டி பகுதியிலிருந்து வரும் பஸ்கள், பஸ் ஸ்டாண்டிற்குள் வராமல் முத்தாலம்மன் பஜார் வழியாகவே ஸ்ரீவில்லிபுத்துார் சென்று விடுகிறது.
இதனால் இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் அரசு மருத்துவமனைக்கு செல்வதில் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் சிரமத்துடன் நடந்து செல்லும் நிலை காணப்படுகிறது.
எனவே, வெளியூர்களில் இருந்து வரும் பஸ்களும், இலந்தைகுளம், கோட்டையூர், தம்பிபட்டி கிராமங்களில் இருந்து வரும் பஸ்களும், வத்திராயிருப்பு பஸ் ஸ்டாண்ட்டிற்கு வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

