/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாணவர்களுக்கு பா.ஜ., பாராட்டு
/
மாணவர்களுக்கு பா.ஜ., பாராட்டு
ADDED : டிச 28, 2025 05:48 AM
சாத்துார்: திருநெல்வேலி மானுார் அரசு பள்ளி மாணவர்களுக்கு பா.ஜ., சார்பில் சாத்துாரில் பாராட்டு விழா நடந்தது.
கேரள மாநிலம் காசர்கோட்டில் நடந்த இந்திய அளவிலான சப்ஜூனியர் டென்னிகேட் விளையாட்டு போட்டியில் பங்கேற்ற மானுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஜோயல் முதல் பரிசையும், சுராஜ் கோசன் ஜாய் 2ம் பரிசையில் பெற்றனர். அவர்களுக்கு சாத்துாரில் விருதுநகர் பா.ஜ., விளையாட்டு பிரிவு மாவட்ட தலைவர் வைர பிரகாஷ் தலைமையில் பாராட்டு விழா நடந்தது.
மாவட்ட துணைத் தலைவர் முனீஸ்வரன் வரவேற்றார். தொகுதி பொறுப்பாளர் சுரேஷ்குமார்ஜோயலுக்கு ரொக்க பரிசு ரூ 10,000, நினைவு பரிசும் வழங்கினார். சாத்துார் சட்டசபை தொகுதி அமைப்பாளர் மாரிகண்ணு சுராஜ் கோசன் ஜாய்க்கு ரொக்கம் ரூ 5000 , நினைவுபரிசும் வழங்கினார். கட்சிநிர்வாகிகள் பங்கேற்றனர். டென்னிகேட் கோச் முத்தையா நன்றி கூறினார்.

