நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் பாதுகாப்பான பயணம் செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஸ்டேஷனில் ஒலிபெருக்கி மூலம் வாசகங்கள் தெரிவிக்கப்படுகிறது.
இதில் உடைமைகளை பாதுகாத்துக்கொள்ளுதல், படிக்கட்டில் நின்று பயணம் செய்வதை தவிர்த்தல், தண்டவாளத்தில் குறுக்காக கடக்க கூடாது, வழித்தவறிய குழந்தைகளை மீட்க உதவுதல், ரயிலில் குற்றச்செயல்களில் ஈடுபவர்கள் குறித்து 1512 என்ற எண்ணிற்கு அழைத்து தகவல் தெரிவிக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் ரயில்வே ஸ்டேஷனில் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து தெரிவிக்கப்படுகிறது.

