/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தாயில்பட்டியில் எஸ்.ஐ.,யை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
/
தாயில்பட்டியில் எஸ்.ஐ.,யை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
தாயில்பட்டியில் எஸ்.ஐ.,யை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
தாயில்பட்டியில் எஸ்.ஐ.,யை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
ADDED : பிப் 07, 2024 12:26 AM
சாத்துார் : தாயில்பட்டியில் எஸ்.ஐ., தாக்கியஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
சாத்துார் தாயில்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் தர்மர், 32. ஆட்டோ டிரைவர். இவர் ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சனையில் அலைபேசி டவரில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார்.
ஆட்டோ டிரைவர் தர்மர் நேற்று காலை11:00 மணிக்கு அரிவாளுடன் தாயில்பட்டி மெயின் ரோட்டில் போவோர் வருவோரை எல்லாம் அசிங்கமாக ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
அங்கு வந்த எஸ்.ஐ., கோபாலகிருஷ்ணன் தர்மர் வைத்திருந்த அரிவாளை பறிக்கமுயன்ற போது எஸ்.ஐ .,யை தாக்கினார். இதில் எஸ்.ஐ.,கோபாலகிருஷ்ணன் கையில் லேசான காயமடைந்தார். பணியில் இருந்த போலீஸ் எஸ்.ஐ., யை பணி செய்யவிடாமல் தடுத்ததோடு அரிவாளை காட்டி மிரட்டி யதாக போலீசார் தர்மர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

