ADDED : ஏப் 18, 2025 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: கே.ஆர்.டி.ஏ. அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கவுதம், அபிஷேக், அஸ்வின், கார்த்திகேயன், ஸ்ரீநிவாஸ், ஆகியோர் தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் இப்பள்ளி மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று வருகின்றனர். இம்முறை அதிகமாக 5 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் விஜயகுமார், ஆசிரியர்கள் பாராட்டினர்.

