ADDED : மே 08, 2025 02:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு,: வத்திராயிருப்பு கிழவன்கோயில் தர்மசாஸ்தா கோயிலில் வருஷாபிஷேக உற்ஸவம் நடந்தது.
அதிகாலை 5:30 மணிக்கு கணபதி ஹோமம், ருத்ர ஏகாதசி, அபிஷேகம், பூஜைகள் துவங்கின. உலக நலன் கருதி சாஸ்தா பிரீதி என்ற நிகழ்வு நடந்தது.
கடவுளை திருவிளக்கில்எழுந்தருளச் செய்து பூஜைகள் செய்து கம்பங்குடி வாரிசுகள் அருள் வாக்கு கூறினர். குலதெய்வ வழிபாட்டுக்காரர்கள், வத்திராயிருப்பு கிராம மக்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை ராமசுப்பிரமணியன், ஹரிஹர சுப்பிரமணியன், சத்திய நாராயணன், ஸ்ரீகுமார், பாலாஜி, அருண் சுப்பிரமணியன், சங்கர நாராயணன் உள்ளிட்டோர் செய்தனர்.

