/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பருவமழையில் தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க அறிவுரை
/
பருவமழையில் தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க அறிவுரை
ADDED : அக் 27, 2025 03:25 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பருவமழையில் இருந்து தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தோட்டக்கலை துணை இயக்குனர் சுபா வாசுகி தெரிவித்தார்.
அவரது செய்திக்குறிப்பு: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் தோட்டக்கலை பயிர்களான வெங்காயம், வாழை, மா, தக்காளி, கொய்யா, தென்னை உட்பட இதர தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க சாகுபடி செய்த பரப்பை அடங்கல், இ- அடங்கலில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மா, கொய்யா, எலுமிச்சை, தென்னை மரங்களின் காய்ந்த, பட்டுப்போன கிளைகளை அகற்றி, மரங்களின் எடையை குறைக்கும் வகையில் கிளைகளை கவாத்து செய்து மரத்தின் வேர்ப்பகுதியில் மண் அணைத்து தண்டுப்பகுதியில் மண்ணை குவித்து வைத்தல் வேண்டும்.
டிரைகோடெர்மா விரிடி, சூடோமோனஸ் ஆகிய பூஞ்சாண உயிரியல் கட்டுப்பாடு காரணியை வேர்பகுதியில் இட்டு பாதுகாத்தல், தென்னையில் தேங்காய், இளநீர் அறுவடைக்கு பின், பழைய ஓலைகளை அகற்றி மரத்தின் சுமைகளை குறைக்க வேண்டும்.
வாழை மரத்தை காற்றினால் பாதிப்பு ஏற்படாதவாறு அடியில் மண் அனைத்து, மரங்களை சுற்றி சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும், என்றார்.

