/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மின்கம்பங்களில் விளம்பர பதாகைகளால் பாதிப்பு மின் ஊழியர்களுக்கும் சிக்கல்

ADDED : மே 04, 2025 05:00 AM

ராஜபாளையம் : ராஜபாளையம் நகர் பகுதி தெரு விளக்கு மின்கம்பங்களில் விளம்பர பதாகைகள் வைத்துள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.
ராஜபாளையத்தில் பிரதான ரோடுகளில் உள்ள மின் கம்பங்களில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் விளம்பர பதாகைகளை கட்டி வைத்துள்ளன. தற்போது பள்ளிகள் சேர்க்கை காலகட்டம் என்பதால் இவை பிரதானமாகவும், நில விற்பனை, நிதி, வர்த்தக நிறுவனங்கள் தங்கள் பங்கிற்கு விளம்பர பதாகைகளை கட்டி வைத்துள்ளன.
ஏற்கனவே கோடை காலங்களில் மின்வெட்டு காரணமாக மின் ஊழியர்கள் பராமரிப்பு பணிக்காக கம்பங்களில் ஏறுவதற்கு தடையாக உள்ளதுடன் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புவதாக அமைந்துள்ளது. அதிக காற்று வீசும் சமயங்களில் இவை பறந்து ஆபத்தை ஏற்படுத்தியும் வருகிறது.
இது குறித்து காளீஸ்வரன்: நகராட்சி ஊராட்சி நிர்வாகங்கள் இது போன்ற மின்கம்பங்களில் கட்டி வைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிகளை மீறி மின்கம்பங்களில் கட்டி வைக்கப்பட்டுள்ள பதாகைகளுக்கு தகுந்த அபராதம் விதித்து அப்புறப்படுத்த வேண்டும்.