sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மருந்து வாங்க சென்றவர் மயங்கி விழுந்து பலி; மெயின் பஜார் ஆக்கிரமிப்பால் நேர்ந்த சோகம்

/

மருந்து வாங்க சென்றவர் மயங்கி விழுந்து பலி; மெயின் பஜார் ஆக்கிரமிப்பால் நேர்ந்த சோகம்

மருந்து வாங்க சென்றவர் மயங்கி விழுந்து பலி; மெயின் பஜார் ஆக்கிரமிப்பால் நேர்ந்த சோகம்

மருந்து வாங்க சென்றவர் மயங்கி விழுந்து பலி; மெயின் பஜார் ஆக்கிரமிப்பால் நேர்ந்த சோகம்


ADDED : மார் 09, 2024 08:45 AM

Google News

ADDED : மார் 09, 2024 08:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகரில் மருந்து வாங்க சென்றவர், மெடிக்கல் முன் மயங்கி விழுந்த நிலையில், ஆம்புலன்ஸ் வர தாமதமான சூழலில், ஆக்கிரமிப்பு, நெரிசலால் மெயின் பஜார் உள்ளே ஆட்டோவும் வர தாமதமானதால் முதியவர் பலியானார்.

விருதுநகர் மெயின் பஜாரில் மத்திய அரசின் சலுகை விலை மெடிக்கல் உள்ளது. இங்கு நேற்று மதியம் 12:30 மணிக்கு முதியவர் ஒருவர் மருந்து வாங்க வந்தார். நேற்று சிவராத்திரி காரணமாக பொருட்கள் வாங்க மக்கள் கூட்டமும் அதிகம் இருந்தது. இந்நிலையில் அங்கு வந்த முதியவர் மயங்கி விழுந்தார். ஆம்புலன்ஸ் ஆர்.ஆர்., நகரில் இருந்து வந்து கொண்டிருந்தது.

*ஆட்டோ கூட வரமுடியாத நிலை:

இந்நிலையில் மெயின் பஜாரில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகளால் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களாலும் ஏற்பட்டிருந்த போக்குவரத்துநெரிசலால்ஆட்டோவும் உள்ளே வர முடியாத சூழல் இருந்தது. இந்நிலையில் அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸை எதிர்பார்க்காமல் ஒரு வழியாகஆட்டோவை உள்ளேஅழைத்து வந்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் பக்கத்து சந்து பெ.சி., தெருவழியாக சென்றனர். அங்கும் நெரிசல் ஏற்பட்டது.அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்ததில்முதியவர் இறந்து விட்டதாக கூறினர்.

ஆக்கிரமிப்பே காரணம்:

இதற்கு முக்கிய காரணம் மெயின் பஜாரில் அவசரத்திற்கு கூட ஆம்புலன்ஸ், ஆட்டோக்கள் வர முடியாத அளவு அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகள் தான். மேலும் கண்காணிப்பில் இருக்க வேண்டிய போலீசார் யாரும் அந்நேரத்தில் அங்கு இல்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மெயின் பஜார், புல்லலக்கோட்டை ரோடு சந்திப்பு, மீனாம்பிகை பங்களா போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. சிறிது நேரம் மட்டுமே அங்கு போலீசார் இருக்கின்றனர்.

இந்த முதியவர் இறப்புக்கு ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக உள்ளதோ அதே போல் நெரிசலை கட்டுப்படுத்தாத போலீசாரும் ஒரு காரணம்.

ஆகவே மாவட்ட நிர்வாகம் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி அவசர வாகனங்கள் வந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us